லக்னௌவை வீழ்த்தி சிஎஸ்கே அபாரம்; புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்!
ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் முதலில் விளையாடியது.
ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
Advertisement
முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்தது.
204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கும் முன்னேறியது.