முகப்பு
கிரிக்கெட்

பொறுமையும் எளிமையும்... ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி!

ஆட்ட நாயகன் விருது வென்ற ககிசோ ரபாடாவின் பேட்டி குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ககிசோ ரபாடா. - படம்: ஏபி
பகிர்:

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெறக் காரணமாக இருந்த குஜராத் அணியின் வீரர் ககிசோ ரபாடா, “டெஸ்ட் போட்டிகளில் வீசுவது போல லைன் மற்றும் லைந்தில் கவனம் செலுத்தி பந்துவீசினேன்” எனக் கூறியுள்ளார்.

நேற்றிரவு (மே.12) நடந்த ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 168/5 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 14.5 ஓவர்களில் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தப் போட்டியில் குஜராத் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா 4 ஓவர்களில் 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். ஆட்ட நாயகன் வென்ற இவர் போட்டிக்குப் பிறகு பேசியிருப்பதாவது:

Advertisement

Advertisement

நடப்பு சீசனில் ஆடுகளம் எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். எனக்கென ஒரு பங்கு இருக்கிறது. அணிக்காக எல்லாவற்றையும் தருவேன். ஒத்திசைவுதான் முக்கியம்.

100 சதவிகிதம் டெஸ்ட் போட்டிக்கான லைன், லெந்தில் பந்துவீசியது உதவியது. எப்படி பந்துவீச வேண்டுமென எதிரணி எங்களுக்குக் காண்பித்தார்கள். ஆடுகளம் சிறிது பிசுபிசுப்பாக இருந்தது. பொறுமையும் எளிமையான திட்டமிடலும் வேலை செய்தது என்றார்.

summary

Patience and simplicity worked on a sticky wicket, says Kagiso Rabada

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments