முகப்பு
கிரிக்கெட்

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய ஆர்சிபி அணி குறித்து...

தேவ்தத் படிக்கல், விராட் கோலி. - படம்: எக்ஸ் / ஐபிஎல்
பகிர்:

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்து புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. பஞ்சாப் அணி ஆர்சிபிக்கு எதிராக டாஸ் வென்று பந்துவீசியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 222/4 ரன்கள் குவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 73 ரன்கள், கோலி 58 ரன்கள் எடுத்தார்கள்.

இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிகமுறை (44) 200-க்கும் அதிகமான ரன்களை எடுத்த அணியாக ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணி 43 முறை 200-க்கும் அதிகமான ரன்களை எடுத்திருந்தது.

Advertisement

Advertisement

சிஎஸ்கே அணி 2 சீசன்கள் விளையாடாமலேயே இந்த சாதனையை தன்னிடம் தக்கவைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

200க்கும் அதிகமான ரன்கள் குவித்த அணிகள்

44- ஆர்சிபி (19 சீசன்களில்)

43 - சிஎஸ்கே (17 சீசன்களில்)

41 - பஞ்சாப் (19 சீசன்களில்)

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 50 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதற்கு அடுத்ததாக ஆர்சிபி அணி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

summary

RCB Breaks CSK's Record! Most 200-plus totals recorded in Men’s T20 cricket

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments