கெய்ல், டி வில்லியர்ஸுக்குக் கெளரவம் அளித்த ஆர்சிபி
முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.
ஹால் ஆஃப் ஃபேம் என்கிற புதிய நடைமுறையை ஐபிஎல் போட்டியில் தொடங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் அணி.
கிரிக்கெட்டில் அதிகமாகப் பங்களித்தவர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் என்கிற கெளரவம் அளிக்கப்படும். ஐபிஎல் போட்டியில் ஹால் ஆஃப் ஃபேமைத் தொடங்கியுள்ள ஆர்சிபி அணி, முன்னாள் வீரர்களான கிறிஸ் கெயில், டி வில்லியர்ஸ் ஆகியோருக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பதாக அறிவித்துள்ளது.
2011-17 வரை ஆர்சிபி அணியில் கெயில் விளையாடியுள்ளார். பிறகு கடந்த வருடம் வரை பஞ்சாப் அணியில் இடம்பெற்றார். 2011 முதல் கடந்த வருடம் வரை ஆர்சிபி அணிக்காக டி வில்லியர்ஸ் விளையாடியுள்ளார். ஹால் ஆஃப் ஃபேம் அறிவிப்பு தொடர்பான விடியோவை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்வில் இருவரின் பெயர்களையும் கோலி அறிவித்தார். பிறகு இணையம் வழியாக கெய்லும் டி வில்லியர்ஸும் தங்களுடைய மகிழ்ச்சியை ஆர்சிபி அணியினருடன் பகிர்ந்துகொண்டார்கள்.
Advertisement
Advertisement
ஐபிஎல் 2022 போட்டியில் மே 19 அன்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் அணியுடன் ஆர்சிபி அணி மோதுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.