இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல்-லிருந்து ரச்சின் ரவீந்திரா பாதியிலேயே விலகல்!
ஐபிஎல் தொடரிலிருந்து கொல்கத்தா வீரர் ரச்சின் ரவீந்திரா பாதியிலேயே விலகியுள்ளதைப் பற்றி...
இலங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்குத் தயாராவதற்காக ரச்சின் ரவீந்திரா ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் நடைபெற்று வருகிறது. மும்பை, லக்னௌ அணிகள் இந்தத் தொடரில் விலகிய நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறும் வகையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க பஞ்சாப், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் மிகத் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இந்தத் தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியும் அடைந்து 8-வது இடத்தில் இருக்கிறது.
Advertisement
Advertisement
இன்னும் 3 போட்டிகளில் விளையாடவிருக்கும் கொல்கத்தா அனைத்திலும் வெற்றி பெற்றாலும், 14 புள்ளிகளுடன் அடுத்த சுற்று வாய்ப்பை எட்டுவது கடினம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்தைச் சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான ரவீந்திரா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சிகளைத் தொடங்குவதற்காக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை வீரரான ரவீந்திராவை 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியிருந்தது.
26 வயதான ரச்சின் ரவீந்திரா, முதல்முறையாக இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடவிருக்கிறார். நடப்பு தொடரில் ஒரு போட்டியில்கூட ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் திடலில் நாளை நடைபெறும் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது கொல்கத்தா அணி.
இங்கிலாந்து செல்லும் நியூசிலாந்து அணி மே 27 ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்துக்கு எதிரான நான்கு நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவிருக்கிறது. அதைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் போட்டி ஜூன் 4-8 வரை லார்ட்ஸிலும், ஜூன் 17-21 வரை தி ஓவலிலும், ஜூன் 25-29 வரை நாட்டிங்காமிலும் நடைபெறவிருக்கிறது.
நியூசிலாந்தின் டெஸ்ட் அணியில் நட்சத்திர வீரராகத் திகழும் ரச்சின் ரவீந்திரா, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 165 ரன்கள் குவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் 176 ரன்களும், மவுண்ட் மௌங்கானுவில் நடைபெற்ற போட்டியில் இர்னடு இன்னிங்ஸ்களில் ஆட்டமிழக்காமல் 72 மற்றும் 46 ரன்களும் எடுத்திருந்தார்.
Kolkata Knight Riders all-rounder Rachin Ravindra has left the IPL to begin preparations for New Zealand's upcoming Test tour of England, the franchise said in a squad update on the eve of their home match against Gujarat Titans.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.