முகப்பு
ஐபிஎல்

த்ரில் வெற்றிபெற்ற சிஎஸ்கே படைத்த அரிய சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரிய சாதனைப் படைத்துள்ளது.

Updated On : 1 ஏப்ரல் 2019, 12:32 pm IST
பகிர்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரிய சாதனைப் படைத்துள்ளது.

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 12-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. கேப்டன் தோனி 46 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 இமாலய சிக்ஸர்களுடன் 75 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

Advertisement

Advertisement

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடைசி கட்டத்தில் மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் த்ரில் வெற்றிபெற்றதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐபிஎல் தொடர்களில் அதிக தொடர் வெற்றிகளை பதிவு செய்து அரிய சாதனைப் படைத்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

  • ஏப்ரல் 2013 முதல் 02 மே 2013 வரை தொடர்ந்து 7 வெற்றிகள்
  • ஏப்ரல் 2014 முதல் 05 மே 2014 வரை தொடர்ந்து 6 வெற்றிகள்
  • மே 2018 முதல் 31 மார்ச் 2019 வரை தொடர்ந்து 6 வெற்றிகள்*

(நடப்பு சீசனில் மேலும் 11 லீக் ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், இதே நிலை நீடித்தால் சிஎஸ்கே-வின் தொடர் வெற்றிப்பட்டியல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments