குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டம்
குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் குன்னூர் ராணுவ மையத்தின் சார்பில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தெற்கு கட்டளைக்கு கீழ் வரும் 10 குழுக்களைச் சேர்ந்த 60 ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர் தங்கராஜ் மைதானத்தில் நெடுந்தூர ஓட்டப் பந்தயம் தொடங்கப்பட்டது. சிங்காரத் தோப்பு வழியாகச் சென்று ராணுவ வீரர்கள் மீண்டும் மைதானத்தை வந்தடைந்தனர். இதில், பெங்களூரு ராணுவ மையத்தைச் சேர்ந்த ஹவில்தார் பி. சிரினு 32.10 நிமிடங்களில் இந்த தூரத்தைக் கடந்து முதலிடம் பெற்றார். வெலிங்டன் ராணுவ மையத்தைச் சேர்ந்த சிப்பாய் லிங்கராஜு இரண்டாமிடத்தையும், சுபேதார் கரண் சிங் மூன்றாமிடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு எம்ஆர்சி ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான் பரிசு கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார்.