முகப்பு
செய்திகள்

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி இன்று சென்னையில் தொடக்கம்

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.

Updated On : 24 ஜூலை 2018, 12:46 am IST
பகிர்:

ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்குகின்றன.
இதில் இந்திய அணி தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ளது.
ஏற்கெனவே தனிநபர் பிரிவு போட்டிகள் முடிவுற்ற நிலையில் தற்போது அணிகளுக்கான போட்டிகள் தொடங்குகின்றன. இதில் ஸ்விட்சர்லாந்து, சவூதி அரேபியா, போன்ற அணிகளுடன் இ பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது. தனிநபர் பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்திய எகிப்து அணி முதல்நிலை வீராங்கனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 போலந்து போட்டியில் எகிப்து இரண்டாம் இடம் பெற்றிருந்தது. கனடா 2, இங்கிலாந்து 3, கடந்த முறை பட்டம் வென்ற பாகிஸ்தான் 11-ஆம் இடத்திலும் உள்ளன. இதுதொடர்பாக தேசிய பயிற்சியாளர் சைரஸ் பூனச்சா கூறியது: இ பிரிவில் இந்தியா முதலிடம் பெற வாய்ப்புள்ளது. காலிறுதியில் செக்.குடியரசு அல்லது பாக். அணியை சந்திக்கலாம் என்றார்.
இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகளின் அணிகள் பங்கேற்றுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments