ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இந்தியா- நவ. 9-இல் தொடக்கம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நடத்தப்படும் 6-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் போட்டியில் முதன்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் நடத்தப்படும் 6-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன் போட்டியில் முதன்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளது இந்தியா.
மே.இ. தீவுகளில் கடந்த 2010-இக்கு பின் இரண்டாவது முறையாக வரும் 9 ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
10 அணிகள் போட்டியிடுடம் இதில் நடப்பு சாம்பியன் மே.இ. தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை போன்றவை நேரடியாக தகுதி பெற்றுள்ளன. கடந்த ஜூலையில் நடைபெற்ற தகுதி ஆட்டங்களில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற வங்கதேசம், அயர்லாந்தும் இறுதியாக தகுதி பெற்றன.
குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மே.இ.தீவுகள், வங்கதேசமும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
கயானாவில் உள்ள கயானா தேசிய மைதானம் (15,000 பேர்), செயின்ட் லூசியாவில் உள்ள டேரன்சமி மைதானம் (15,000 பேர்), ஆண்டிகுவாவில் உள்ள விவ் ரிச்சர்ட்ஸ் மைதானம் (10,000 பேர்) உள்ளிட்ட 3 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தொடக்க ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி அட்டவணை
நவ. 9: இந்தியா-நியூஸிலாந்து, நவ. 11: இந்தியா-பாகிஸ்தான், நவ. 15: இந்தியா-அயர்லாந்து, நவ. 17: இந்தியா-ஆஸ்திரேலியா.
அரையிறுதி, இறுதி ஆட்டங்கள்
முதல் அரையிறுதி ஆட்டம் 22-ஆம் தேதி மாலை 4 மணிக்கும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது.
இறுதி ஆட்டம் 24-ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
ஆஸி. அணி மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த 2017 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அது முதல் இந்திய மகளிர் அணி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. எனினும் தனது தகுதிக்கு ஏற்ப ஆசிய கோப்பை டி20 இறுதி ஆட்டத்தில் வலுகுறைந்த வங்கதேசத்திடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது இந்தியா.
மூத்த வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், வேறுபாடுகள் ஏற்பட்டதாலும் பயிற்சியாளர் துஷார் ஆரோத்தை நீக்கி விட்டு ரமேஷ் பவாரை பயிற்சியாளராக நியமித்தது பிசிசிஐ. மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி டி20 ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
இந்திய அணிககு ஹர்மன்ப்ரீத் கெளர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்மன்ப்ரீத் கெளர், மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தானா, ஜேமியா ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோரால் வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. அதே நேரத்தில் பந்துவீச்சில் சற்று தடுமாற்றம் நிலவுகிறது.
அனுபவ வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அருந்ததி ரெட்டி, மான்சி ஜோஷி, பூஜா வஸ்தார்கர் 3 வேகப்பந்து வீச்சாளர்களும், சுழற்பந்தில் பூனம் யாதவும், ஏக்தா பிஷ்ட், ராதா யாதவ், உள்ளனர்.
இந்திய அணி விவரம்
ஹர்மன்ப்ரீத் கெளர் கேப்டன், ஸ்மிருதி மந்தானா (துணை கேப்டன்), தன்யா பாட்டியா, ஏக்த் பிஷட். தயாளன் ஹேமலதா, மான்சி ஜோஷி, வேதா கிருஷ்ணமூர்த்தி, அனுஜா பட்டீல், மிதாலி ராஜ், அருந்ததி ரெட்டி, ஜேர்மியா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, பூஜா வஸ்தார்கர், ராதா யாதவ், பூனம் யாதவ்.
போட்டி தொடர்பாக ஹர்மன்ப்ரீத் கெளர் கூறியதாவது:
இந்த போட்டியில் பங்கேற்க வீராங்கனைகள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இப்போட்டிகள் சவால் நிறைந்தவையாக இருக்கும். எந்த அணியையும் நாங்கள் எளிதாக கருதவில்லை. துவக்க சுற்றில் சில கடினமான போட்டியாக அமையும், கடந்த 2017 மகளிர்உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் வென்ற நிலையில் இந்தியா மீது எதிர்பார்ப்பு அதிரித்துள்ளது என்றார்.
கடந்த 2009, 2010-இல் அரையிறுதியோடு வெளியேறியதே அதிகபட்ச சாதனையாகும். தற்போது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லவேண்டும் என்ற முனைப்போடு உளது இந்தியா.