முகப்பு
செய்திகள்

சில நேரங்களில் கடைசி ஓவர்களில் திட்டமிட்டப்படி வீச இயலாது: ஜஸ்ப்ரீத் பும்ரா

சில நேரங்களில் கடைசி ஓவர்களில் திட்டமிட்டபடி வீச இயலாமல் போகிறது என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியுள்ளார்.

Updated On : 26 பிப்ரவரி 2019, 2:48 am IST
பகிர்:


சில நேரங்களில் கடைசி ஓவர்களில் திட்டமிட்டபடி வீச இயலாமல் போகிறது என இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் கடைசி ஓவரில் உமேஷ் யாதவ் 14 ரன்களை வாரி வழங்கினார். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு தான் ஆஸி. அணியை 19-ஆவது ஓவரில் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட் வீழ்த்தி நிலைகுலையச் செய்தார் பும்ரா. ஆனால் அந்த தாக்கத்தை தொடராமல் உமேஷ் யாதவ் ரன்களை வாரி வழங்கியதாக சர்ச்சை உள்ளது.
இதுதொடர்பாக பும்ரா திங்கள்கிழமை கூறியதாவது: கடைசி கட்ட ஓவர்களில் (டெத் ஓவர்) திட்டமிட்டபடி சில நேரங்களில் பந்து வீச முடியாது. கடைசி ஓவர்களில் பந்துவீசுவது மிகவும் கடினமானது. நாம் தெளிவாக திட்டமிட்டபடி வீசினாலும், சில சமயங்களில் அது கைகொடுக்கலாம். ஆஸி. அணி டாஸ் வென்றதால், இந்த ஆட்டத்தில் அவர்களுக்கு என்ன தேவை என திட்டமிட்டுக் கொண்டனர்.
இந்த பிட்சில் 145 ரன்களை எடுத்திருந்தால் சற்று பாதுகாப்பாக இருந்திருக்கும். இதனால் நமக்கு நெருக்கடி ஏற்பட்டது. பேட்டிங்குக்கு சாதகமான பிட்சாக அது அமையவில்லை.
தொடக்க வீரர் ராகுல் சிறப்பாக ஆடினார். தோனியும் ஸ்கோரை உயர்த்துவதில் அக்கறை செலுத்தினார்.  ஆஸி. அணியில் பந்துவீச்சாளரான பேட் கம்மின்ஸ் பொறுப்பாக ஆடி பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார் என்றார் பும்ரா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.