சீனியர் தேசிய ஹாக்கி: ஹிமாசல் அணிக்கு முதல் வெற்றி
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில்
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக எழும்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜி பிரிவு ஆட்டத்தில் 5-1 என்ற கோல்கணக்கில் அஸ்ஸாமை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. சாம்பியன்ஷிப்பின் 8வது நாள் போட்டிகள் இன்று நடந்தது.
ஹிமாசல பிரதேச பிரதேச அணி முன்னதாக 2 ஆட்டங்களில் விளையாடி, இரண்டிலும் தோல்வி கண்ட நிலையில் தனது 3வது ஆட்டத்தில் அற்புதமாக ஆடி அஸ்ஸாமை வென்றது. இதனால் அஸ்ஸாம் ம் வெளியேறியது.
இதே ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது 3 லீக் ஆட்டங்களிலும் வென்று 9 புள்ளிகள் பெற்று முன்னிலை பெற்று காலிறுதியை உறுதி செய்த நிலையில் நாளை இமாசல பிரதேச அணியுடன் கடைசி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெறுகிறது.
ஈ பிரிவு கேரளம்- பாட்டியாலா அணிகள் மோதிய ஆட்டம் 4-4 என டிராவில் முடிந்தது.
ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்ற எச் பிரிவு ஆட்டங்ளில் ஹாக்கி கூர்க் அணி 2-1 என ஸ்டீல் பிளான்ட் அணியையும், சாய் அணி 2-1 என அகில இந்திய போலீஸ் அணியையும் வென்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.