முகப்பு
செய்திகள்

விளையாட்டுப் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது: தமிழக அரசு

கரோனா பரவலைத் தடுக்க விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல் 2021, 2:00 pm IST
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்க விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 3,986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சென்னையில் மட்டும் 1459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஏப்ரல் 10 முதல் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டுப் போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments