புரோ கபடி: இன்று இறுதி ஆட்டம்
புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன
புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் - புணேரி பல்தான் அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. அகமதாபாதில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம், ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் அலைவரிசையில் நேரலை ஆகிறது.
இந்த இரு அணிகளில், ஜெய்ப்பூா் அணி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கான முனைப்பில் இருக்கிறது. மறுபுறம் புணே(ரி) அணி முதல் முறையாக சாம்பியனாவதற்கு முயற்சிக்கிறது.
இந்த சீசனில் மொத்தம் நடைபெற்ற 22 லீக் ஆட்டங்களின் முடிவில் ஜெய்ப்பூா் 15 வெற்றியுடன் முதலிடமும், புணே 14 வெற்றியுடன் 2-ஆம் இடமும் பிடித்திருந்தன. பின்னா் அரையிறுதி ஆட்டத்தில் புணே அணி - தமிழ் தலைவாஸையும், ஜெய்ப்பூா் அணி - பெங்களூரு புல்ஸையும் வென்று இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.