முகப்பு
செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!

சாம்பியன்ஸ் லீக்கில் அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள் குறித்து...

Updated On : 16 ஏப்ரல் 2026, 11:53 am IST
சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள். - படங்கள்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்.
பகிர்:

சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதிப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அரையிறுதிக்கு அத்லெடிகோ மாட்ரிட், ஆர்செனல், பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் ஆகிய நான்கு அணிகள் தேர்வாகியுள்ளன.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட், லிவர்பூல், ஸ்போர்டி எப்ஃசி ஆகிய அணிகள் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறின.

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் முக்கியமான கால்பந்து தொடராக சாம்பியன்ஸ் லீக் இருக்கிறது. இதில் அதிகமுறை கோப்பை வென்ற ரியல் மாட்ரிட் அணி நேற்றிரவு நடந்த போட்டியில் போராடி தோல்வியுற்றது.

Advertisement

Advertisement

நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி லிவர்பூல் அணியை துவம்சம் செய்து, அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த அரையிறுதிப் போட்டிகள் வரும் ஏப்.29, 30 மற்றும் மே.6, 7ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.

அரையிறுதியில் அத்லெடிகோ மாட்ரிட் - ஆர்செனல் அணியுடனும் பயர்ன் மியூனிக் - பிஎஸ்ஜியுடனும் மோதுகின்றன. இறுதிப் போட்டி மே.30ஆம் தேதி ஒரேயொரு போட்டியாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

summary

Champions League: 4 Teams Advance to the Semifinals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.