FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அதிக கோல்கள் - அதிக க்ளீன் ஷீட் கொண்ட அணிகள் மோதும் இறுதிப் போட்டி..! யார் வெல்லுவார்கள்?

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆர்செனல், பிஎஸ்ஜி அணிகள் குறித்து...

சாம்பியன்ஸ் லீக் போஸ்டர். - படம்: எக்ஸ் / சாம்பியன்ஸ் லீக்.
பகிர்:

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள ஆர்செனல், பிஎஸ்ஜி அணிகளால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாகியுள்ளார்கள்.

இந்த சீசனில் அதிக கோல்கள் அடித்த பிஎஸ்ஜி அணியும் இந்த சீசனில் குறைவான கோல்களை கொடுத்து சிறந்த தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியுள்ள ஆர்செனல் அணியும் மே.30ஆம் தேதி மோதவிருக்கின்றன.

ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் மிக முக்கியமான கால்பந்துத் தொடராக சாம்பியன்ஸ் லீக் இருக்கிறது. ஐரோப்பாவின் டாப் 5 தொடர்களில் இருந்து தேர்வாகும் அணிகள் இதில் பங்கேற்கின்றன.

Advertisement

Advertisement

மொத்தமாக 36 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் ரவுண்ட் ஆஃப் 16, காலிறுதி, அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்து தற்போது இறுதிப் போட்டிக்கு ஆர்செனல், பிஎஸ்ஜி அணிகள் தேர்வாகியுள்ளன.

இந்த சீசனில் அதிக கோல்கள் (43) அடித்த அணியாக பிஎஸ்ஜி அணி இருக்கிறது. அதேபோல் 9 க்ளீன் ஷீட் பெற்று வெறுமனே 6 கோல்களை மட்டுமே ஆர்செனல் அணி எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்செனல் அணி இந்த சீசனில் தோல்வியே காணாத அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மாறாக, பிஎஸ்ஜி அணி இந்த சீசனில் 2 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளதும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லாத ஆர்செனல் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் முதல்முறையாக கடந்த சீசனில் கோப்பை வென்ற பிஎஸ்ஜி 2ஆவது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது.

summary

Arsenal, Psg in Champions League final best attacker vs best defencer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments