டி20 லீக் இறுதிப் போட்டிகளில் 1 ரன்னில் இருமுறை தோல்வி அடைந்த ஸ்டீவ் ஸ்மித்!
கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இரண்டு முறை டி20 லீக் இறுதிப் போட்டியில் 1 ரன்னில் தோல்வியுற்றது குறித்து...
ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் டி20 லீக் இறுதிப் போட்டிகளில் இரண்டு முறை 1 ரன்னில் தோல்வியடைந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் எம்எல்சி டி20 லீக் தொடரில் வாஷிங்டன் ஃபிரீடம் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். 2024ல் சாம்பியன், 2025ல் இறுதிப் போட்டியில் தோற்ற அவர் இந்த 2026லும் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார்.
இந்த சீசனின் எம்எல்சி இறுதிப் போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் நைட் ரைடர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. வாஷிங்டன் ஃபிரீடம் அணி 1 ரன்னில் தோல்வியுற்றது.
Advertisement
Advertisement
முன்னதாக, ஐபிஎல் டி20 தொடரில் 2017ல் ரைசிங் புணே ஜெயண்ட்ஸ் (ஆர்பிஎஸ்) அணிக்கு ஸ்மித் கேப்டனாக இருந்தார். அந்த சீசனின் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 1 ரன்னில் தோல்வியுற்றிருப்பார்.
இரண்டு வித்தியாசமான டி20 லீக்கில் இரண்டு முறையும் 1 ரன்னில் மட்டுமே ஸ்மித் தலைமையிலான அணி தோல்வியுற்றுள்ளது. அதிலும் கடைசியாக ரன் அவுட்டிலேயே முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணிகள், வேறு வேறு கண்டங்களில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மாதிரி நடந்துள்ளது. டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இது அரிதான, வித்தியாசமான நிகழ்வாக அமைந்திருக்கிறது. ஸ்டீவ் ஸ்மித் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.
Steve Smith has suffered two heartbreaking T20 league final defeats by exactly 1 run.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.