மெஸ்ஸி 2 கோல்கள்: இன்டர் மியாமி புள்ளிப் பட்டியலில் 2ஆம் இடத்துக்கு முன்னேற்றம்!
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமியின் வெற்றி குறித்து...
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி 3 - 2 என கொலராடோ ராபிட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் 2-0 என இன்டர் மியாமி முன்னிலை வகித்தது. 18ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி பெனால்டியில் ஒரு கோல், 45+5ஆவது நிமிஷத்தில் ஜெர்மன் பெர்டெராமே கோல் அடித்தார்.
Advertisement
இரண்டாம் பாதியில் கொலராடோ ராபிட்ஸ் 58, 62ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 2-2 என சமன்படுத்தினார்கள். பின்னர், 79ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி தனது மேஜிக்கை நிகழ்த்தி கோல் அடித்தார்.
தொடர்ச்சியாக 7 போட்டிகளாக தோல்வியில்லாமல் இன்டர் மியாமி அணி முன்னேறி வருகிறது. நடப்பு சாம்பியனான இன்டர் மியாமி அணி இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.