மூன்றாவது டிவிஷனுக்கு தள்ளப்பட்ட முன்னாள் சாம்பியன் லெஸ்டர் சிட்டி..! சோகத்தில் ரசிகர்கள்!
முன்னாள் பிரீமியர் லீக் சாம்பியன் லெஸ்டர் சிட்டி மூன்றாவது டிவிஷனுக்கு கீழிறங்கியது குறித்து...
இங்கிலாந்தின் முதல் தர கால்பந்து கோப்பையான பிரீமியர் லீக்கை வென்ற வென்றிருந்த முன்னாள் சாம்பியன் லெஸ்டர் சிட்டி அணி இரண்டாம் டிவிஷனில் இருந்து கீழிறங்கி, மூன்றாவது டிவிஷனுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2016ல் யாருமே எதிர்பார்க்காத, 5000-1 என வெற்றி பெற்ற லெஸ்டர் சிட்டி, தற்போது மிகவும் மோசமான விளையாட்டை விளையாடியுள்ளது.
இங்கிலாந்தில் 1884ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட லெஸ்டர் சிட்டி அணி 2021ல் எஃப்ஏ கோப்பையை வென்றது. கடந்த 2025 சீசனில் மோசமாக விளையாடியதால், பிரீமியர் லீக்கில் இருந்து இரண்டாம் டிவிஷனான சாம்பியன்ஷிப்பிற்கு கீழிறங்கியது.
Advertisement
Advertisement
தற்போது சாம்பியன்ஷிப்பில் ஹல் சிட்டியுடன் 2-2 என சமநிலையில் முடிந்ததால், புள்ளிப் பட்டியலில் 23ஆவது இடத்தில் இருக்கிறது. இதனால், சாம்பியன்ஷிப்பில் இருந்து லீக் 1க்கு கீழிறக்கியுள்ளது.
இது குறித்து லெஸ்டர் சிட்டி அணியின் குழுத் தலைவர் ஐயாவத் ஸ்ரீவத்தனாபிரபா கூறியிருப்பதாவது:
இதற்கு எந்தவிதமான சாக்குபோக்கும் சொல்லமுடியாது. நாம் உயரத்திலும் உயரம் பார்த்திருக்கிறோம்; தற்போது தாழ்விலும் தாழ்வைப் பார்க்கிறோம். நமக்கு எல்லோருக்குமே வலிகள் பகிரப்பட்டுள்ளன.
நாங்கள் ஏற்படுத்திய சோகத்துக்கு உண்மையாகவே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். முன்னேற்ற பாதையில் செல்ல என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம் எனக் கூறியுள்ளார்
லெஸ்டர் சிட்டி அணியின் 142 ஆண்டுகால கால்பந்து பயணத்தில் ஒரேயொரு முறை (2008-2009 சீசன்) மூன்றாவது டிவிஷனான லீக் ஒன்னில் விளையாடியது. அடுத்த ஆண்டே சாம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறியது.
இங்கிலாந்தில் முதல் தரமாக - பிரீமியர் லீக், இரண்டாவது தரமாக - இஎஃப்எல் சாம்பியன்ஷிப், மூன்றாவது தரமாக - இஎஃப்எல் லீக் 1, நான்காவது தரமாக - இஎஃப்எல் லீக் 2 போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது, லெஸ்டர் சிட்டி இரண்டாவது முறையாக மூன்றாவது டிவிஷனுக்கு கீழிறங்கியது அந்த கிளப் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Former Premier League champion Leicester relegated to third division.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.