தாய்லாந்து மாஸ்டர்ஸில் முதல்முறையாக தங்கம் வென்ற இந்திய வீராங்கனை தேவிகா!
இளம் இந்திய பாட்மின்டன் வீராங்கனை நிகழ்த்திய சாதனை குறித்து...
இளம் இந்திய பாட்மின்டன் வீராங்கனை தேவிகா சிஹாக் (20 வயது) தாய்லாந்து மாஸ்டர்ஸில் தனது முதல் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
மலேசிய வீராங்கனை கோ ஜின் வெய் உடனான போட்டியில் தேவிகா 21-8, 6-3 கேமில் முன்னிலையில் இருந்தார்.
பின்னர், தசைப் பிடிப்பு காரணத்தினால் கோ ஜின் வெய் வெளியேறினார். இதனால், இந்திய வீராங்கனை தேவிகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
தேவிகா சூப்பர் 300 பட்டத்தை முதல்முறையாக பெற்றுள்ளார். இவரும் பி.வி.சிந்தும் பெங்களூரில் ஒரே பயிற்சியாளரின் கீழ் பயிற்சி எடுப்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கேமில் 21-8 என வெல்ல, இரண்டாவது கெமில் 6-3 என்றிருந்த வேலையில் கோ ஜின் வெய் மிகவும் சிரமப்பட்டார். பின்னர், வெளியேறினார்.
கடந்த சீசனில் இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 100-ல் இறுதிப் போட்டியில் தேவிகா தோல்விற்றிருந்தார். இதுதான் அவரது மிகச் சிறந்த செயல்பாடாக இருக்கிறது.
இதற்கு முன்பாக சூப்பர் 300 பிரிவில் சாய்னா நேவால், பி.வி.சிந்து வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வென்ற தேவிகாவுக்கு தங்கப் பதக்கமும் இந்திய மதிப்பில் ரூ.17.19 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Young Indian shuttler Devika Sihag clinched her maiden BWF Super 300 crown after Malaysia's Goh Jin Wei retired midway through the women's singles final of the Thailand Masters, a USD 250,000 event, here on Sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.