கேப் வெர்டேவுடன் கடினமாக இருக்குமென முன்பே தெரியும்: மெஸ்ஸி
கேப் வெர்டே போட்டிக்குப் பிறகு மெஸ்ஸி அளித்த பேட்டி குறித்து...
கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் கேப் வெர்டே அணியை வீழ்த்திய பிறகு ஆர்ஜென்டீனாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, “எங்களுக்கு ஏற்கெனவே இந்தப் போட்டி கடினமானதாக இருக்குமெனத் தெரியும்” என்றார்.
அமெரிக்காவின் இண்டர் மியாமியில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டி, 120 நிமிஷங்கள் வரை நடைபெற்றது. இதில் ஆர்ஜென் டீனா 3- 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மெஸ்ஸி 1 கோல், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் அளிக்கப்பட்டது. விருது வென்ற பிறகு அவர் பேசியிருப்பதாவது:
Advertisement
Advertisement
எங்களுக்கு ஏற்கெனவே இந்தப் போட்டி கடினமானதாக இருக்குமெனத் தெரியும். இந்த உலகக் கோப்பையில் யாருமே எளிதான வெற்றியைத் தந்துவிட மாட்டார்கள். தற்போது, ஓய்வு எடுக்க வேண்டும், இந்தப் போட்டியில் கற்றதுடன் அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப் வெர்டே அணிக்கு வாழ்த்துகள்.
கேப் வெர்டே ஸ்பெயின், உருகுவே அணிகளிடம் தோல்வியைச் சந்திகாமல் வந்துள்ளது என்பது வெறுமனே விபத்தல்ல. நாங்கள் முதல் கோல் அடித்தது நல்லதாக அமைந்தது. அதனால்தான் நாங்கள் சற்று நிதானமாக எங்களது ஆட்டத்தை சரிசெய்ய முடிந்தது.
முதல் கோல் அடித்த பிறகு ரிலாக்ஸாக விளையாடலாம் என நினைத்தோம். ஆனால், முற்றிலும் எதிராக நடந்தது. பந்தை அவர்களின் வசம் கொடுத்தோம்; பின்னடைவைச் சந்தித்தோம். நாக் அவுட் போட்டி என்பதால் யாரும் எளிதாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றார்.
ஆர்ஜென்டீனா அணி 11 ஆவது முறையாக தொடர்ச்சியாக வென்று அசத்தியுள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எகிப்துடன் மோதவிருக்கிறது.
We Knew This Would Be Very Tough Match: Messi Admits After Argentina Survives Upset Scare Against small nation Cape Verde
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.