யூரோ கோப்பையும் உலகக் கோப்பையும் ஒன்றுதான்... தோல்விக்குப் பிறகு பேசிய ரொனால்டோ!
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பேட்டி குறித்து...
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, “யூரோ கோப்பையும் உலகக் கோப்பையும் அளவில் ஒன்றுதான்” என்று பேட்டியளித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் அணியிடன் போர்ச்சுகல் 0-1 என தோல்வியுற்றது. இதனால், காலிறுதிக்கு முன்னேறாமல் போர்ச்சுகல் அணி வெளியேறியது.
உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
Advertisement
Advertisement
போர்ச்சுகல் அணிக்காக 3 கோப்பைகளை வென்றுள்ளேன். கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு முன்பாக போர்ச்சுகல் எந்தவொரு கோப்பையையும் வெல்லவில்லை. எங்கள் தேசிய அணி வென்றதிலேயே மிகப்பெரிய கோப்பை என்றால் அது யூரோ 2016 கோப்பைதான்.
உண்மையைச் சொல்ல வேண்டுமானால் யூரோ கோப்பை உலகக் கோப்பை அளவில் ஒன்றுதான். அது எப்போதும் இருக்கும். நாளை என்பது புதிய நாள், நாங்கள் நம்பிக்கையுடன் செல்கிறோம் என்றார்.
பிரான்ஸ் அணியை வீழ்த்தி 2016ல் யூரோ கோப்பையை போர்ச்சுகல் அணி வென்றது. இதுவரை உலகக் கோப்பையை வெல்லாமல் இருக்கிறது.
ரொனால்டோவின் இந்தப் பேட்டி சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Cristiano Ronaldo says Euro as significant as World Cup, divides social media
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.