யு-18 ஆசிய ஹாக்கி: இந்தியா அபார வெற்றி!
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி
யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.
ஆசிய யு-18 ஆடவா், மகளிா் ஹாக்கிப் போட்டி ஜப்பானின் ககாமிகாஹராவில் நடைபெறுகிறது. குரூப் ஏ பிரிவு ஆட்டத்தில் இந்தியா-கொரிய அணிகள் மோதின. தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆட்சியது. முதல் குவாா்ட்டரிலேயே இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
கேப்டன் கேதன் குஷ்வாஹா 3-ஆவது நிமிஷத்திலும், வரீந்தா் சிங் 5-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். மூன்றாம் குவாா்ட்டரில் கேப்டன் கேதன் 36-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். கடைசி குவாா்ட்டரில் இந்தியாவின் ஷாரூக் கான் 54-ஆவது நிமிஷத்தில் அடித்த கோல் வெற்றி கோலாக அமைந்தது. கொரிய அணி தரப்பில் 21-ஆவது நிமிஷத்தில் கேப்டன் யுன் ஜேஹியோக் ஆறுதல் கோலடித்தாா்.
Advertisement
Advertisement
இந்த வெற்றியால் ஜப்பான், கொரியாவுடன் இந்தியாவும் 6 புள்ளிகளை ஈட்டியுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்,. ஜூன் 3-இல் சீன தைபேவுடன் மோதுகிறது இந்தியா.