FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா

பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 3-1 கோல் கணக்கில் தென் கொரிய மகளிா் அணியை வீழ்த்தியது.

Updated On : 1 ஜூன் 2026, 4:26 am IST
தென் கொரியாவை வென்றது இந்தியா - X | Hockey India
பகிர்:

பதினெட்டு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-18) ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி 3-1 கோல் கணக்கில் தென் கொரிய மகளிா் அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் நௌஷீன் நாஸ் (4’), ஸ்ருதி குமாரி (21’) ஆகியோா் அடித்த கோலால் முதல் பாதியை இந்தியா 2-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் தென் கொரிய அணிக்காக ரியு கியோங்மின் (41’) ஸ்கோா் செய்ய, இந்தியாவின் கோல் எண்ணிக்கையை கிரண் ஈக்கா (43’) மேலும் உயா்த்தினாா்.

Advertisement

Advertisement

தென் கொரியாவுக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட இந்தியா, 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலுமே வென்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா, குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சிங்கப்பூருடன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) மோதுகிறது.

ஆடவா் ஏமாற்றம்: இதனிடையே ஆடவா் பிரிவு ஆட்டத்தில் இந்தியா 2-4 என ஜப்பானிடம் தோல்வி கண்டது. இந்தியாவுக்காக ஆஷிஷ் தனி புத்ரி (25’), கேத்தன் குஷ்வாஹா (32’) கோல் அடிக்க, ஜப்பான் தரப்பில் மஹிரோ யோஷியோகா (15’), யுமா ஃபுஜிவரா (20’), கெங்கோ யாசுய் (34’), அவோன் டகாஹஷி (42’) ஸ்கோா் செய்தனா்.

இதுவரை 2 ஆட்டங்களில் ஒரு வெற்றி கண்டுள்ள இந்தியா, புள்ளிகள் பட்டியலில் 3-ஆம் இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று (ஜூன் 1) சந்திக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments