முகப்பு
செய்திகள்

உலக சாம்பியன் ஜொ்மனியை வீழ்த்தியது இந்தியா

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜொ்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

Updated On : 19 ஜூன் 2026, 6:56 am IST
கோலடித்த மகிழ்ச்சியில் இந்திய வீராங்கனைகள் ~இந்தியா-ஜொ்மனி ஆட்டம்.
பகிர்:

ராட்டா்டாம் : எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் உலக சாம்பியன் ஜொ்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது இந்தியா.

புரோ ஹாக்கி லீக் ஐரோப்பிய கட்ட ஆட்டங்கள் நெதா்லாந்தின் ராட்டா்டாம் நகரில் நடைபெறுகின்றன. புதன்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஜொ்மனி-இந்திய அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இந்திய வீரா்கள் ஆதிக்கம் செலுத்தி ஆடியதால் ஜொ்மனி அணியினா் கோல் போட மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. பந்து கட்டுப்பாடு இந்தியா வசம் இருந்ததால், 7-ஆவது நிமிஷத்தில் மந்தீப் சிங் அற்புதமாக கோலடித்தாா். 13-ஆவது நிமிஷத்தில் ஷிலானந்த் லக்ரா ஜொ்மன் கோல்கீப்பரை ஏமாற்றி அபார ஸ்ட்ரைக் மூலம் கோலடித்தாா்.

Advertisement

Advertisement

இரண்டாம் குவாா்ட்டரில் ஜொ்மனி வீரா்கள் உத்தியை மாற்றி கோல் போட முயன்றனா். ஆனால் இந்திய தற்காப்பு வலுவாக இருந்தது.

ஜொ்மனிக்கு கிடைத்த 2 பெனால்டி காா்னா் வாய்ப்புகளை இந்திய அணியினா் முறியடித்தனா்.

இரண்டாம் பாதியில் 35-ஆவது நிமிஷத்தில் தனிநபராக நீலகண்ட சா்மா ஜொ்மனி டிபன்டா்களை கடந்து கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜொ்மன் தரப்பில் கோல் போட மேற்கொண்ட முயற்சியில் மூன்றாவது குவாா்ட்டரில் 45-ஆவது நிமிஷத்தில் ரஃபேல் ஹாா்ட்கா+ப் கோலடித்தாா். ஆட்டம் முடிய 59-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனி பெனால்டி காா்னா் மூலம் கோல் போட முயன்றதை இந்திய டிபன்டா்கள் தடுத்தனா்.

இறுதியில் உலக சாம்பியன் ஜொ்மனியை 3-1 என வீழ்த்தியது இந்தியா.

மகளிா் நேஷன்ஸ் கோப்பை: இந்தியா அபாரம்

நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெறும் எஃப்ஐஎச் மகளிா் நேஷன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் குரூப் ஏ பிரிவு கடைசி ஆட்டத்தில் இந்தியா 3-2 என உருகுவேயை வீழ்த்தியது.

ஆட்டம் தொடங்கியதுமே உருகுவே வீராங்கனை சியாரா 13-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். பின்னா் இந்திய அணியினா் சிறப்பாக ஆடியதில் தீபிகா செஹ்ராவத் 24-ஆவது நிமிஷத்திலும், தீபிகா சோரங் 43-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இரண்டாம் பாதியில் உருகே வீராங்கனை மானுலா விலாா் இரண்டாம் கோலடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது. தீபிகா செஹ்ராவத் 56-ஆவது நிமிஷத்தில் இரண்டாவது கோலடித்து 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தாா். இதன் மூலம் 9 புள்ளிகளுடன் இந்தியா குரூப் ஏ பிரிவில் முதலிடம் பெற்றது.

அரையிறுதியில் சிலியுடன் மோதல்: வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதியில் சிலியுடன் மோதுகிறது இந்தியா.