முகப்பு
செய்திகள்

ஆஃப்சைடாகிய ஈரானின் கடைசி நிமிட கோல்..! டிராவிலும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது எகிப்து!

கால்பந்து உலகக் கோப்பையில் ஈரான் - எகிப்து இடையேயான த்ரில் போட்டி குறித்து...

Updated On : 27 ஜூன் 2026, 3:41 pm IST
நடுவரின் தீர்ப்பும், ஈரான் - எகிப்து வீரர்களின் உணர்ச்சிகளும். - படம்: ஏபி
பகிர்:

சியாட்டல் கால்பந்து திடலில் நடைபெற்ற ஈரான் - எகிப்து போட்டி 1-1 என சமநிலையில் முடிந்து, பார்வையாளர்களிடம் த்ரில்லர் பட அனுபவத்தை அளித்திருக்கிறது.

ஈரானின் கடைசி நிமிட கோல் (90+3’) ஆஃப்சைடு விதியினால் மறுக்கப்படவே, 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனால், ஈராக் அணியினர் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் எகிப்து வீரர் மஹ்மூத் சாபர் 5ஆவது நிமிஷத்தில் கோல் அடிப்பார். இதனை சமன்செய்ய ஈரானின் ராமின் ரெசையன் 14ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.

Advertisement

Advertisement

முதல் பாதியில் 1-1 என முடிந்தது. இரண்டாம் பாதியும் அப்படியே முடிய, ஸ்டாப்பேஜ் நேரம் 6 நிமிஷங்களாக அளிக்கப்பட்டது. இதில் கடைசி நிமிஷத்தில் (90+3’) ஈரான் கோல் அடித்தது. ஆனால், அது ஆஃப்சைடு விதியினால் நிராகரிக்கப்பட்டது.

ரிவிவ் செய்தபிறகு போலந்து நடுவர் ஆஃப்சைடு எனக் கூறியது ஈரானின் இதயங்களை உடைத்தது. கோல் அடித்த மகிழ்ச்சியில் இருந்த சோஜா கலீல்சாதே மிகவும் மனமுடைந்தார்.

இந்தப் போட்டி சமனில் முடிந்ததால் எகிப்து அணி 5 புள்ளிகளிடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஈரான் 3 புள்ளிகளிடன் மூன்றாமிடத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கிறது.

summary

Drama-laden draw leaves Iran in limbo as Egypt set up last-32 clash with Australia

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments