FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அமெரிக்காவில் கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரான் அணிக்கு விசா அனுமதி!

ஈரான் கால்பந்து அணிக்கு விசா அனுமதி அளித்த அமெரிக்கா குறித்து...

Updated On : 6 ஜூன் 2026, 2:26 pm IST
உலகக் கோப்பைப் போட்டிக்காகத் தயாராகிவரும் கலிஃபோர்னிய கால்பந்து திடல். - படம்: ஏபி
பகிர்:

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட ஈரான் கால்பந்து அணிக்கு விசா அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கால்பந்து உலகக் கோப்பைப் போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கின்றன. இதற்காக ஒவ்வொரு அணியில் சொந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்பட தயாராகி வருகின்றன.

இந்த உலகக் கோப்பையில் முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 891 புதிய வீரர்கள் அறிமுகமாகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பிப்ரவரி 28 இல் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து, ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்படுவதில் இழுபறியாக நீடிக்கிறது.

விசா அனுமதி கிடைக்காததால் மெக்சிகோவின் எல்லையில் ஈரான் வீரர்கள் பயிற்சி செய்யும்படியான நிலைமை இருந்துவந்தது.

இந்த நிலையில், ஈரான் கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளருக்கும் சேர்த்து விசா அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் முதலிரண்டு போட்டிகள் கலிஃபோர்னியாவில் ஜூன் 15ல் நியூசிலாந்துடனும் ஜூன் 26ல் எகிப்திடன் சியாட்டலிலும் மோதுகின்றன.

ஈரான், அமெரிக்க அணிகள் இரண்டுமே இரண்டாம் இடத்தில் தேர்வானால், ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் மோத வாய்ப்பிருக்கிறது.

மார்ச் மாதத்தில் டிரம்ப் ஈரான் விளையாட வருவது பாதுகாப்புக்கு நல்லதல்ல எனக் கூறியிருந்தார். ஆனால், ஈரான் தாங்கள் விளையாடுவதை யாருமே மறுக்க முடியாது எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

Iran's World Cup team approved for visas to play games in the US, officials say

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments