ஃபிஃபா உலகக் கோப்பை ! மூடநம்பிக்கையால் வீட்டிலிருந்தே இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் ஆர்ஜென்டீனா அதிபர்!
ஆர்ஜென்டீனா களமிறங்கும் உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியை ஆர்ஜென்டீனா அதிபர் வீட்டிலிருந்தே பார்க்கவுள்ளது குறித்து...
ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை நேரில் சென்று பார்க்கப்போவதில்லை என ஆர்ஜென்டீனா அதிபர் ஜேவியர் மிலி கூறியுள்ளார்.
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டீனா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டீனா அணி வெல்ல வேண்டும் என்பதற்காக, இந்தப் போட்டியை வீட்டிலிருந்தே பார்க்கப்போவதாக அந்நாட்டு அதிபர் ஜேவியர் மிலி கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
வழக்கமாகத் தங்கள் நாட்டின் விளையாட்டு அணிகள் களமிறங்கும் இறுதிப்போட்டிகளை அந்நாடுகளின் தலைவர்கள் நேரில் பார்த்து வரும் நிலையில், மூடநம்பிக்கையின் காரணமாக வீட்டிலிருந்தே இந்தப் போட்டியைப் பார்க்கவுள்ளதாக அதிபர் மிலி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியை எனது கனமான ஜாக்கெட்டை (மேல் கோட்) அணிந்தே பார்த்தேன். மிகவும் சூடாக இருந்ததால் நான் அதைக் கழற்றினேன். அவர்கள் எங்களுக்கு (ஆர்ஜென்டீனா) எதிராக ஒரு கோல் அடித்தனர். உடனே மீண்டும் அதை நான் அணிந்துக்கொண்டேன். மீண்டும் அதைக் கழற்றவில்லை. இறுதிப்போட்டியையும் அதை அணிந்தே பார்க்கப்போகிறேன்”
கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு ஜெர்மனி மற்றும் ஆர்ஜென்டீனா இடையேயான உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியைப் பார்ப்பதற்காக அப்போதைய ஆர்ஜென்டீனா அதிபர் கார்லோஸ் மெனம் திடலுக்கு நேரில் சென்றிருந்தார்.
அந்தப் போட்டியில், ஆர்ஜென்டீனா அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இதுவரை ஆர்ஜென்டீனா அணி களமிறங்கும் இறுதிப்போட்டிகளின் திடலுக்கு நேரில் செல்வதை ஆர்ஜென்டீனா அதிபர்கள் தவிர்த்து வருகின்றனர்.
மேலும், தென் அமெரிக்க நாடான ஆர்ஜென்டீனாவின் மக்கள் தங்களின் அணி வெற்றி பெற்ற வேண்டும் என்பதற்காகப் பல்வேறு மூடநம்பிக்கைப் பழக்கங்களைக் கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Argentine President Javier Milei has stated that he will not attend the World Cup football final match.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.