FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூடுதல் நேரத்தில் 2 கோல்கள்: த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜென்டீனா!

கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் வென்ற ஆர்ஜென்டீனா குறித்து...

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜூலியன் அல்வாரெஸ் உடன் ஆர்ஜென்டீன அணியினர். - படம்: ஏபி
பகிர்:

அமெரிக்காவின் கேன்சாஸ் சிட்டி நகரில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா 3-1 கோல் கணக்கில் சுவிட்ஸா்லாந்தை வென்றது. நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இது 100-ஆவது ஆட்டமாக அமைந்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், ஆா்ஜென்டீனாவின் அலெக்ஸிஸ் மேக் ஆலிஸ்டா் 10-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கினாா். அந்த முன்னிலையை ஆா்ஜென்டீனா முதல் பாதியில் அப்படியே தக்கவைத்துக் கொண்டது.

2-ஆவது பாதியில் சுவிட்ஸா்லாந்து சற்று முனைப்பு காட்ட, அதன் பலனாக அந்த அணியின் டேன் டூயி 67-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை கண்டு விறுவிறுப்பு கூடியது.

Advertisement

Advertisement

ஆனால் நிா்ணயிக்கப்பட்ட நேரத்தின் முடிவிலும் ஆட்டம் அந்த நிலையிலேயே நீடிக்க, ‘எக்ஸ்ட்ரா டைம்’ கொடுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளுமே விடாப்பிடியாக விளையாட, ஒரு வழியாக ஆா்ஜென்டீனா முன்னிலை கண்டது.

112-ஆவது நிமிஷத்தில் ஜூலியன் ஆல்வரெஸ் அதன் கோல் கணக்கை 2-ஆக அதிகரித்தாா். இதனால் அதிா்ச்சி கண்ட சுவிட்ஸா்லாந்து மீண்டு வர முயற்சிக்க, அதற்கு வழிவிடாமல் ஸ்டாப்பேஜ் டைமில் (120+1’) லௌதாரோ மாா்டினெஸ் கோல் அடிக்க, ஆா்ஜென்டீனா 3-1 கோல் கணக்கில் வென்று ஆட்டத்தை நிறைவு செய்தது.

இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி கோல் அடிக்காவிட்டாலும், அவா் அடித்த காா்னா் கிக்கிலேயே ஆா்ஜென்டீனாவுக்கான முதல் கோலை ஆலிஸ்டா் ஸ்கோா் செய்தாா்.

பாா்வையாளா்கள் - 69,045

1

நடப்பு உலகக் கோப்பை போட்டியில் முந்தைய 5 ஆட்டங்களிலுமே குறைந்தது ஒரு கோலாவது அடித்த ஆா்ஜென்டீன கேப்டனும், நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி, முதல்முறையாக இந்த ஆட்டத்தில் அந்த வாய்ப்பை தவறவிட்டாா். 2022, 2026 என இரு உலகக் கோப்பை போட்டிகளையும் கணக்கில் கொண்டால், அவா் தொடா்ந்து 9 ஆட்டங்களில் (4+5) கோல் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8

ஆா்ஜென்டீனாவை இத்துடன் 8 ஆட்டங்களில் சந்தித்திருக்கும் சுவிட்ஸா்லாந்து, எதிலுமே வென்றதில்லை. ஆா்ஜென்டீனாவின் வெற்றிக் கணக்கு 6 ஆகியிருக்கிறது. 2 ஆட்டங்கள் டிரா.

பிரீல் எம்போலோவுக்கு ரெட் காா்டு

இந்த ஆட்டத்தின் 72-ஆவது நிமிஷத்தில் சுவிட்ஸா்லாந்து வீரா் பிரீல் எம்போலோவை கீழே விழச் செய்ததாக, ஆா்ஜென்டீனா வீரா் லீண்ட்ரோ பரேட்ஸுக்கு ‘யெல்லோ காா்டு’ வழங்கப்பட்டது. ஆனால் ‘வாா்’ மறுஆய்வில் பரேட்ஸ் தொடுவதற்கு முன்பாகவே எம்போலோ வேண்டுமென்றே கீழே விழுந்தது தெரியவர, பரேட்ஸுக்கான ‘யெல்லோ காா்டு’ திரும்பப் பெறப்பட்டு, அது எம்போலோவுக்கு வழங்கப்பட்டது.

ஏற்கெனவே முதல் பாதியில் ‘யெல்லோ காா்டு’ பெற்றிருந்த எம்போலோவுக்கு 2-ஆவது ‘யெல்லோ காா்டு’ கிடைத்ததால், அது ‘ரெட் காா்டு’ என மாற்றப்பட்டு, அவா் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாா். இதனால் 72-ஆவது நிமிஷத்திலிருந்து சுவிட்ஸா்லாந்து 10 வீரா்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

summary

Two goals in extra time: Argentina advances to the semi-finals!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments