முகப்பு
விளையாட்டு

உலகக் கோப்பை தோல்வி! குரோஷிய அணியின் பயிற்சியாளர் ராஜிநாமா!

கால்பந்து உலகக் கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியதால் குரோஷிய அணியின் பயிற்சியாளர் பதவி விலகியுள்ளதைப் பற்றி...

Updated On : 8 ஜூலை 2026, 8:17 pm IST
குரோஷிய அணியினர்.
பகிர்:

பிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் தோல்வியடைந்து வெளியேறியதால் குரோஷிய அணியின் பயிற்சியாளர் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. மொத்தமாக 48 அணிகளில் நாக்-அவுட் சுற்றுகள் முடிந்த நிலையில் 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, ஆர்ஜென்டீனா, ஸ்விட்சர்லாந்து ஆகிய எட்டு அணிகளும் காலிறுதியில் மோதவிருக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில், ரவுண்ட் ஆஃப் 32 அணிகள் மோதிய சுற்றில் குரோஷிய அணி, போர்ச்சுகலிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் குரோஷிய அணி தோல்வியடைந்ததால், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் பதவி விலகுவதாகத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலகக்கோப்பை வரலாற்றில் குரோஷிய கால்பந்து அணியின் மிகப்பெரிய வெற்றிகளுக்கு நான் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பெருமிதம் கொண்டு, மனநிறைவுடன் விடைபெறுகிறேன்.

எனக்கு பின் வருபவரும் குரோஷிய கால்பந்து அணியும் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன்.  தேசிய அணியை வழிநடத்துவதை விடப் பெரிய கௌரவம் வேறெதுவுமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லாட்கோ டாலிக் தலைமையில் குரோஷிய அணி, ரஷியாவில் 2018 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இரண்டாம் இடத்தையும், கத்தாரில் நடந்த 2022 உலகக் கோப்பையில் மூன்றாம் இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

summary

Zlatko Dalic is out as Croatia's coach after a spell that included leading the team to two consecutive top-three finishes at World Cups.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments