ஃபிஃபா உலகக் கோப்பை: 36 லட்சம் பேர் பங்கேற்று வரலாற்றுச் சாதனை!
ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்கள் பங்கேற்ற போட்டியாக ஜெர்மனி - ஈக்வடார் போட்டி சாதனை
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்டதாக ஜெர்மனி - ஈக்வடார் போட்டி சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி திடலில் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான குரூப் இ பிரிவு போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியை 2 - 1 கோல் கணக்கில் ஈக்வடார் அணி தோற்கடித்தது. மேலும், 32 அணிகள் கொண்ட சுற்றுக்கும் ஈக்வடார் தகுதி பெற்றது.
இந்த நிலையில், ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரலாற்றிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட போட்டி என்ற சாதனையும் இந்தப் போட்டியில் படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
1994-ல் அமெரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 35,87,538 பேர் பங்கேற்றிருந்தது சாதனையாக இருந்து வந்த நிலையில், அதனை முறியடிக்கும் வகையில், வியாழக்கிழமையில் நடைபெற்ற ஜெர்மனி - ஈக்வடார் இடையிலான போட்டியில் 36,05,357 பேர் கலந்துகொண்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
மேலும், இதனை உறுதிசெய்யும் வகையில் திடலின் அமைக்கப்பட்டிருந்த எல்இடி திரைகளிலும் பார்வையாளர்களின் சாதனை ஒளிபரப்பப்பட்டது.
FIFA World Cup 2026 becomes most-attended edition in tournament's history
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.