1930 ரீவைண்ட்! கால்பந்து திருவிழாவின் தொடக்கம்!!
1930 பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் திருவிழாவின் தொடக்கத்தைப் பற்றி...
கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் உலகளவில் மிகப்பெரிய திருவிழாவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் கால்பந்துத் திருவிழா எங்கிருந்து தொடங்கியது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
உலகெங்கிலும் இருக்கும் கால்பந்து அணிகள் குவாலிஃபையர் முறையில் இந்தத் தொடருக்குத் தேர்வாகின்றனர். சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பால் (பிஃபா) கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
1900-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 1904-ஆம் ஆண்டில் பிஃபா நிறுவப்பட்டது.
Advertisement
Advertisement
பிஃபாவின் தலைவராகவும், 'உலகக் கோப்பையின் தந்தை' என்று அறியப்பட்டவருமான ஜூல்ஸ் ரிமெட், 1920 ஒலிம்பிக்கில் பிஃபா சார்பில் உலகக் கோப்பை நடத்துவதை முன்மொழிந்தார்.
பிஃபா நிறுவப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து கால்பந்து தொடரைத் தனியாக நடத்த முடிவெடுத்து, முதல் உலகக் கோப்பை 1930 ஆம் ஆண்டில் ஜூலை 13 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தொடரில் 13 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்தத் தொடர் உருகுவேவில் நடைபெற்றது.
இந்தத் தொடரில் தென் அமெரிக்காவிலிருந்து 7 அணிகள், ஐரோப்பாவிலிருந்து 4 அணிகள், வட அமெரிக்காவிலிருந்து 2 அணிகள் பங்கேற்றிருந்தன.
அணிகள் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆர்ஜென்டீனா, சிலி, பிரான்ஸ், மெக்சிகோ, யூக்கோஸ்லாவியா, பிரேசில், பொலிவியா, உருகுவே, பெரு, ருமேனியா, அமெரிக்கா, பராகுவே, பெல்ஜியம் ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தனர்.
1930 ஜூலை 30 நடைபெற்ற முதல் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில், போட்டியை நடத்திய நாடான உருகுவே அணி ஆர்ஜென்டீனாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதல் பிஃபா தொடர் காரணமாக 1932-ஆம் ஆண்டில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கால்பந்து சேர்க்கப்படவில்லை. இருப்பினும், 1936-ல் இந்த விளையாட்டு மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் கால்பந்து சேர்க்கப்பட்டது.
அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைக் கொண்டாடும் வகையில், இறுதிப் போட்டி முடிந்த மறுநாள் உருகுவேயில் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.
உருகுவேயின் தலைநகரான மான்டிவீடியோவில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றன. உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரத்யேகமாகக் கட்டப்பட்ட எஸ்டாடியோ சென்டனாரியோ திடலில் அனைத்துப் போட்டிகளும் நடைபெற்றன.
1930 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியே, இரண்டு ஸ்பானிய மொழி பேசும் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதல் மற்றும் ஒரே போட்டி என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்திருக்கிறது.
The 1930 FIFA World Cup was the first FIFA World Cup, the world championship for men's national football teams. It took place in Uruguay from 13 to 30 July 1930.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.