FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... ஃபிஃபா தரவரிசை டாப்4ல் இருக்கும் 4 அணிகளும் அரையிறுதிக்குத் தேர்வு!

கால்பந்து உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகள் குறித்து...

Updated On : 12 ஜூலை 2026, 3:18 pm IST
அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நான்கு அணிகள். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய நான்கு அணிகளும் ஃபிஃபா தரவரிசையில் டாப் 4ல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு உலகக் கோப்பையில் ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஃபிஃபா தரவரிசையிலும் இந்த நான்கு அணிகளே டாப் 4ல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து உலகக் கோப்பைக்கு முன்பாக ஃபிஃபா தரவரிசையில் ஆர்ஜென்டீனா முதலிடம், ஸ்பெயின் இரண்டாமிடம், பிரான்ஸ் மூன்றாமிடம், இங்கிலாந்து நான்காவது இடமும் பிடித்திருந்தன.

Advertisement

Advertisement

தற்போதைய ஃபிஃபா தரவரிசையின்படி பிரான்ஸ் முதலிடம், ஆர்ஜென்டீனா இரண்டாமிடம், ஸ்பெயின் மூன்றாமிடம், இங்கிலாந்து நான்காவது இடமும் பிடித்திருக்கின்றன.

ஃபிஃபா தரவரிசைப் பட்டியல். - படம்: ஃபிஃபா.

பலம்வாய்ந்த நான்கு அணிகளும் அரையிறுதிக்கு வந்திருப்பது மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்பந்து உலகக் கோப்பையின் வரலாற்றில் முதல்முறையாக இப்படி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபிஃபா தரவரிசை 1994 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த உலகக் கோப்பையில் அது பயன்படுத்தப்படவில்லை. அடுத்த 1998 உலகக் கோப்பை முதல் இதுவரை டாப் 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

முதல் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் ஜூலை 15ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதியில் ஆர்ஜென்டீனா - இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணிகள் ஜூலை 19ல் இறுதிப் போட்டியில் மோதவிருக்கின்றன.

summary

The top four teams in Fifa's world rankings have made the semi-finals of the World Cup for the first time.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments