முகப்பு
செய்திகள்

16/16: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகள்..! எகிப்துடன் மோதும் ஆர்ஜென்டீனா!

கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகள் குறித்து...

Updated On : 4 ஜூலை 2026, 2:21 pm IST
காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 நாடுகளின் கொடிகள். - படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.
பகிர்:

கால்பந்து உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தேர்வான 16 அணிகளின் விபரங்களை ஃபிஃபா வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 48 அணிகள் பங்கேற்று, தற்போது 16 அணிகளாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தற்போது, ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கான போட்டிகள் முடிவடைந்துள்ளன. அடுத்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டிகள் இன்றுமுதல் தொடங்குகின்றன.

Advertisement

Advertisement

கனடா, பிரேசில், பராகுவே, மொராக்கோ, நார்வே, பிரான்ஸ், மெக்சிகோ, இங்கிலாந்து, பெல்ஜியம், அமெரிக்கா, ஸ்பெயின், போர்சுகல், ஸ்விட்சர்லாந்து, எகிப்து, ஆர்ஜென்டீனா, கொலம்பியா ஆகிய 16 அணிகள் இதுவரை தேர்வாகியுள்ளன.

பராகுவே - பிரான்ஸ், கனடா - மொராக்கோ, போர்ச்சுகல் - ஸ்பெயின், அமெரிக்கா - பெல்ஜியம் ஆகிய அணிகள் ஒரு குரூப்பிலும் பிரேசில் - நார்வே, மெக்சிகோ - இங்கிலாந்து, ஆர்ஜென்டீனா - எகிப்து, ஸ்விட்சர்லாந்து - கொலம்பியா ஆகியவை மற்றுமொரு குரூப்பிலும் மோதவிருக்கின்றன.

summary

16/16: The 16 teams that qualified for the pre-quarterfinal round!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments