FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அடுத்தாண்டு இந்தியாவுக்காக கடைசி உலகக் கோப்பையில் விளையாடவுள்ளேன்: விராட் கோலி

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரே இந்திய அணிக்காக தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை என இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

26 செப்டம்பர் 2026, 4:24 pm IST
விராட் கோலி, கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
பகிர்:

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரே இந்திய அணிக்காக தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை என இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை (செப்டம்பர் 27) தொடங்குகிறது.

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரே இந்திய அணிக்காக தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பை என விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக ஜியோஸ்டாரில் அவர் பேசியதாவது: என்னைப் பொருத்தவரை, அடுத்தாண்டு நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் இந்திய அணிக்காக நான் விளையாடப் போகும் கடைசி உலகக் கோப்பைத் தொடராகும். இதனை உத்வேகமாக எடுத்துக்கொண்டு என்னால் முடிந்த அளவுக்கு கடின உழைப்பை வழங்கவுள்ளேன். உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே எங்களது இலக்கு. உலகக் கோப்பையை வெல்ல எந்த அளவுக்கு சவால்கள் நிறைந்திருந்தாலும் அதற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்றார்.

உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து ரோஹித் சர்மா பேசியதாவது: என்னுடைய வேலை முடிந்துவிட்டது என்ற எண்ணம் ஒருபோதும் என்னுடைய மனதில் வரவில்லை. இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் வரை, எப்போதும் அணிக்காக வெற்றி பெற்றுத் தருவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உலகக் கோப்பையில் வெவ்வேறு எதிரணிகளுக்கு எதிராக மற்றும் வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடுவதால் சவால்கள் அதிகம் இருக்கும். அதனால், அதற்கேற்றவாறு இந்திய அணி தயாராக வேண்டும் என்றார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Senior Indian player Virat Kohli has stated that the ODI World Cup scheduled for next year will be the last World Cup he plays for the Indian team.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments