தனிப்பட்ட சாதனைகளுக்காக நான் விளையாடுவதில்லை: விராட் கோலி
தனிப்பட்ட சாதனைகளுக்காக தான் விளையாடுவதில்லை என இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட சாதனைகளுக்காக தான் விளையாடுவதில்லை என இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன் தினம் (செப்டம்பர் 27) திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் 88 பந்துகளில் 139 ரன்கள் (10 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதுமட்டுமின்றி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்திய அணியின் வெற்றிக்காக விளையாடுகிறேன் எனவும், தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடுவதில்லை எனவும் விராட் கோலி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒருநாள் போட்டிகளில் 15000 ரன்கள் கடந்துள்ளதை நம்பராகப் பார்த்தால், அது மிகப் பெரிய சாதனைதான். ஆனால், என்னுடைய இலக்கு மிகவும் எளிமையானது. கடினமான சூழலில் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தருவதே என்னுடைய இலக்கு. அதைத்தான் இத்தனை ஆண்டுகளாக செய்ய முயற்சித்து வருகிறேன். அணியின் வெற்றிக்காக விளையாடுவது இலக்காக இருந்தால் மட்டுமே நீண்ட காலம் விளையாட முடியும். தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடினால் அணிக்காக நீண்ட காலம் விளையாட முடியாது. ஏனெனில், தனிப்பட்ட சாதனையை நீங்கள் நிறைவு செய்துவிட்டால் அணிக்காக வெற்றி பெற்றுத் தரும் பிரதான இலக்கை தவறவிடுவீர்கள் என்றார்.
அடுத்தாண்டு நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரே தான் விளையாடும் கடைசி உலகக் கோப்பைத் தொடர் என விராட் கோலி அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Virat Kohli, one of the senior players of the Indian team, has stated that he does not play for personal achievements.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.