விராட் கோலி அதிரடி அரைசதம்..! டிஎல்எஸ் விதியில் அபாரமாக வென்ற இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்தியா குறித்து...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மழையின் காரணமாக போட்டி டிஎல்எஸ் விதிக்கு மாற்றப்பட்டது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் இன்று (நவ. 4) காலை ஆக்லாந்தில் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
Advertisement
Advertisement
அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணித் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளும், குர்னூர் ப்ரார் 3 விக்கெட்டுகளும், காம்போஜ் 2 விக்கெட்டுகளும் என 9 விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர் வீழ்த்தினர்.
மழையின் காரணமாக அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 32 ஓவர்களில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை இந்திய அணி 22.4 ஓவர்களில் 143/5 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் அசத்தில் அன்ஷுல் கம்போஜ் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.