ஃபிஃபா உலகக் கோப்பை: விற்பனைக்கு வரும் திடலின் புற்கள்! என்ன விலை தெரியுமா?
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் திடலின் புற்கள் விற்பனை குறித்து...
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிப் போட்டி நடைபெறும் திடலின் புற்களை ஃபிஃபா விற்பனை செய்யவுள்ளது.
ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, வருகிற ஜூலை 20 ஆம் தேதியில் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் திடலில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், போட்டி முடிவடைந்ததும் திடலில் உள்ள புற்களை விற்க ஃபிஃபா முடிவு செய்துள்ளது.
Advertisement
Advertisement
திடலின் புல்வெளிகளை தனித்தனித் துண்டுகளாக வெட்டியெடுத்து, அவற்றைக் கண்ணாடிப் பெட்டகத்துக்குள் அடைத்து விற்பனை செய்யப்படவுள்ளது.
இந்த ஒரு பெட்டகத்தின் விலையை 450 அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ. 43.3 ஆயிரம்) விற்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புல் துண்டுகள் ஒவ்வொன்றும் 17.5 : 17.5 என்ற அளவில் இருக்கும் என்று ஃபிஃபா கூறியுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவரிகளுக்கு மட்டும் டோர் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபிஃபா விற்பனை செய்யவிருக்கும் இந்தப் புற்கள், கால்பந்து உலகக் கோப்பைக்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்தப் புல் வகையானது, அமெரிக்காவின் பல்கலைக் கழகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் மூலம் நவீன புற்கள் வளர்ப்பு ஒளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.
முன்னதாக, இந்தத் தற்காலிக புல்வெளியின் தரம் மோசமானதாக இருப்பதாகவும், இதில் பந்து உருளும் வேகம் சீராக இல்லை என்றும் கால்பந்து விளையாட்டு வீரர்களும் மேலாளர்களும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
FIFA is selling the grass from the World Cup final. Prices start at $450
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.