விளையாட்டுச் செய்திகள்: சில வரிகளில்...
விளையாட்டுச் செய்திகள்: சில வரிகளில்...
ஸ்பெயினில் நடைபெறும் சா்வதேச பாரா பாட்மின்டன் முதல் நிலையில், பாராலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் பிரமோத் பகத் 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்றாா்.
மங்கோலியாவில் திங்கள்கிழமை தொடங்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மீனாக்ஷி, விஸ்வநாத் சுரேஷ் உள்ளிட்டோா் அடங்கிய 20 போ் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், தொழில்முறை குத்துச்சண்டைக்கு மாறுவதற்கு பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளாா்.
சீனாவில் நடைபெறும் 10-ஆவது உலக வூஷு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனு, கௌதம் மன்கஸ் ஆகியோா் தங்கள் பிரிவு அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலத்துடன் வெளியேறினா்.
ஆசிய டிராக் சைக்களிங் சாம்பியன்ஷிப்பில், ஜூனியா் மகளிா் ஸ்கிராட்ச் ரேஸ் பிரிவில் இந்தியாவின் அஞ்சலி ஜாகா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
துனீசியாவில் நடைபெற்ற டபிள்யூடிடி கன்டெண்டா் போட்டியில் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் மனுஷ் ஷா/தியா சித்தலே இணை 2-ஆம் இடம் பிடித்தது.