முகப்பு
செய்திகள்

ஆசியக் கோப்பை யு17 - இந்திய ஆடவா் கால்பந்து அணி அறிவிப்பு

Updated On : 3 மே 2026, 5:03 am IST
இந்திய ஆடவா் கால்பந்து அணி - @IndianFootball
பகிர்:

சௌதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஏஎஃப்சி யு 17 கால்பந்து கோப்பை போட்டிக்கான இந்திய ஆடவா் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிா் அணி தலைமை பயிற்சியாளா் பிபியனா பொ்ணான்டஸ் கூறியது: இந்திய அணி தற்போது கத்தாரிலில் பயிற்சி மேற்கொண்டுள்ளது. இரண்டு நட்பு ஆட்டங்களில் ஆடியுள்ளது. மே 3 ஆம் தேதி சௌதி அரேபியாவின் ஜெத்தா நகருக்கு செல்கிறது. குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தானுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது. நான்காவது அணியாக கொரிய அணி விலகி விட்டது.

மே 6-இல் ஆஸி.யுடனும், 10-இல் உஸ்பெக் அணியுடன் மோதுகிறது இந்தியா.

Advertisement

Advertisement

முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

அலோக் நிஷாத், மானஸ்ஜோதி, ராஜ்ரூப் சா்க்கார கோல்கீப்பா்கள் உள்பட 23 போ் அணியில் இடம் பெற்றுள்ளனா் என்றாா் பொ்ணான்டஸ்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments