முகப்பு
செய்திகள்

உலக கோப்பை குத்துச்சண்டை - பலமான இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 7 ஜூன் 2026, 2:08 am IST
அபினாஷ்
பகிர்:

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ்-2) போட்டிக்கு பலமான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் கியாங் நகரில் வரும் ஜூன் 15 முதல் 21 வரை இப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணிகள் பிஎஃப்ஐ தலைவா் அஜய் சிங் அறிவித்துள்ளாா்.

மகளிா் அணியில் உலகின் நம்பா் 1 வீராங்கனை மீனாட்சி 51 கிலோ , பூனம் 54 கிலோ, பிரச்சி 57 கிலோ, மஹி லமா 60 கிலோ, சனே 65 கிலோ, ஜிசிமோனி 70கிலோ, சனாமச்சா 75 கிலோ, நைனா 80 கிலோ, அக்ரம் கான் பதான் 80 பிளஸ் கிலோ இடம் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

ஆடவா் பிரிவில் தீபக் 70 கிலோ, ரிஷி 50 கிலோ, நிகில் 55 கிலோ, அன்மோல் 60 கிலோ, அபிநாஷ் ஜம்வால் 65 கிலோ, மால்ஸா 80 கிலோ, ஜுக்னு 85 கிலோ, ஹா்ஷ் சௌதரி 90 கிலோ, சவான் 90 பிளஸ் கிலோ ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இப்போட்டிக்கான தேசிய பயிற்சி முகாம் தீவிரமாக நடைபெற்றது. உலக குத்துச்சண்டை அரங்கில் இந்தியா பலமான வல்லரசு நாடாக உருவெடுத்து வருகிறது.