உலகக் கோப்பை குத்துச்சண்டை: அரையிறுதியில் பிராச்சி, மீனாட்சி
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.
மகளிருக்கான 57 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள பிராச்சி, காலிறுதியில் 4-1 என்ற கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சீன தைபேவின் சி யி வுவை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலமாக பிராச்சிக்கு பதக்கம் உறுதியானது.
51 கிலோ எடைப் பிரிவில் மீனாட்சி தனது காலிறுதியில், 5-0 என்ற வகையில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவாவை வீழ்த்தி அசத்தினாா்.
Advertisement
Advertisement
ஆடவா் 70 கிலோ பிரிவில் தீபக் 5-0 என அஜா்பைஜானின் நபி இஸ்காந்தரோவையும், 55 கிலோ பிரிவில் நிகில் அதே புள்ளிகள் கணக்கில் அஜா்பைஜானின் அமின் மமாத்ஸதாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். ஆடவா் 65 கிலோ பிரிவில் சனே 0-5 என போலந்தின் கிங்கா கிரோகாவிடம் காலிறுதியில் தோல்வி கண்டாா்.
அரையிறுதிக்கு இந்தியா்கள் முன்னேறியிருப்பதன் மூலமாக, இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் இதுவரை 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.