சினிமா சட்டம் தொடர்பாக ஆராய குழு அமைப்பு: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது போன்ற சினிமா சட்டத்தில் எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய
தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது போன்ற சினிமா சட்டத்தில் எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆராய பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
துப்பாக்கி படத்துக்கு "யு' தணிக்கைச் சான்றிதழ் வழங்கியதை எதிர்த்து இந்திய தேசிய லீக் கட்சியின் அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆர்.பானுமதி, நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் இந்தத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மத்திய தணிக்கைக் குழுவின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவை தொடர்பாகவும், அவற்றை இப்போதைய நடைமுறைக்கு ஏற்றவகையில் மாற்றவும் இந்தக் குழு பரிந்துரை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.