சுற்றுச்சூழலைக் காக்கும் ஓவியரின் தூரிகைப் பயணம்
விருத்தாசலம் தனியார் அறிவியல் கல்லூரியில் "தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' எனும் தலைப்பில்
விருத்தாசலம் தனியார் அறிவியல் கல்லூரியில் "தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
÷விருத்தாசலத்தை அடுத்த எருமனூரில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் ஈரநிலம் அறக்கட்டளை சார்பில் "தானே புயலும்- நீலகிரி நிலச்சரிவும்' எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.
÷கண்காட்சியில் கடந்த 1 ஆண்டுக்கு முன் கடலூர் மாவட்ட விவசாயிகளை முழுமையாக பாதித்த தானே புயலின் தாக்கம் குறித்த ஓவியங்களும், நீலகிரியில் நடந்த நிலச்சரிவின் அபாயங்களையும் விளக்கும் வகையில் ஓவியங்கள் இடம் பெற்றன.
Advertisement
÷மேலும், காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள். இயற்கை வளங்களை சுரண்டுவதால் உருவாகும் அபாயங்களை சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சியில் இடம் பெற்றிருந்தன.
÷ஓவியக் காட்சி குறித்து ஈரநிலம் தொண்டு அமைப்பின் தலைவரும், ஓவியருமான ந.தமிழரசன் தெரிவித்தது:
÷தமிழகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலுக்கிய மிகப்பெரும் நிகழ்வுகள் "தானே புயலும், நீலகிரி நிலச்சரிவும்' ஆகும். இவை ஏற்படக் காரணம் என்ன என்பதை விளக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஓவியப் பயணத்தை நடத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
÷எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தி மாணவர்கள், இளைஞர்கள்ளிடம் இருப்பதால் இந்த விழிப்புணர்வை அவர்களிடம் தொடங்கினால் சிறப்பாக இருக்கும் என கருதியதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, அந்த மாணவர்களிடத்தில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டது.
÷கடந்த ஜனவரி 2-ம் தேதி சென்னையில் தொடங்கிய கண்காட்சி 32 மாவட்டங்களை கடந்து வரும் மார்ச் 4-ம் தேதி புதுச்சேரியில் முடிவடைகிறது.
÷தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இதுவரை நடந்த ஓவியக் கண்காட்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்லூரி இளைஞர்கள் கலந்து கொண்டு, கருத்துகளை தெரிந்து கொண்டனர்.
÷மேலும், இக்கண்காட்சி தங்களுக்கு மிகவும் பயன்படுவதாகவும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குவதாக தெரிவித்தனர் எனக் கூறினார்.
÷எருமனூர் சி.எஸ்.எம். அறிவியல் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தது: இந்த கண்காட்சியின் மூலம் நாங்கள் பல உண்மைகளை தெரிந்து கொண்டோம். மரங்களை வெட்டுவதால் உண்டாகும் தீமைகள், நீர்நிலைகள், வயல்கள் ஆகியவற்றை வீட்டுமனைகளாக மாற்றியதால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் தெரிந்து கொண்டோம் எனத் தெரிவித்தனர்.
÷இயற்கையைப் பாதுகாக்க தன்னந்தனி மனிதராய் தமிழகம் முழுவதும் ஓவியங்களோடு பயணிக்கும் ஓவியர் தமிழரசனின் தூரிகைப் பயணம் பாராட்டுக்குரியது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.