முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 2013-14-ம் ஆண்டில் மின்சார மானியத்துடன் சேர்த்து ரூ. 12,197 கோடியை

Updated On : 22 மார்ச் 2013, 2:16 am IST
பகிர்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 2013-14-ம் ஆண்டில் மின்சார மானியத்துடன் சேர்த்து ரூ. 12,197 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பான பட்ஜெட் அறிவிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மோசமான நிதி நிலையைச் சரிசெய்யும் வகையில் நிதிநிலை மறு சீரமைப்புத் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்த மறு சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மின் வாரியத்தின் ரூ. 12,211 கோடி அளவிலான குறுகிய காலக் கடன் பொறுப்புகளில் 50 சதவீதத் தொகையை அரசே ஏற்றுக்கொள்ளும். அதோடு 2012-13-ம் ஆண்டிலிருந்து மின் வாரியத்துக்கு ஏற்படும் பண இழப்பில் ஒரு பகுதி நிதியையும் அரசு வழங்கும்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த மின் வாரியத்தை மீட்கும் வகையில் 2011-12-ம் நிதியாண்டில் ரூ. 7,913.35 கோடி நிதி உதவியை தமிழக அரசு அளித்தது.

2012-13-ம் ஆண்டில் ரூ. 11,242 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதோடு கிராம மின்மயமாக்கல் நிறுவனத்திடமிருந்தும், மின்சார நிதி நிறுவனத்திடமிருந்தும் ரூ. 10 ஆயிரம் கோடி கடன் பெற காப்புறுதியும் அரசு வழங்கியது.

இப்போது 2013-14-ம் நிதியாண்டில் மின்சார மானியம் ரூ. 5,197 தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ. 12,197 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சர்க்கரை ஆலைகளுக்கு குறுகிய காலக் கடன்: கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் முன்னோடித் திட்டங்கள், 2013-14-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த பல்வேறு சர்க்கரை ஆலைகளுக்கு குறுகிய காலக் கடனாக ரூ. 352 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.