முகப்பு
தமிழ்நாடு

ஆலையை மூடியதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கு

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

Updated On : 2 ஏப்ரல் 2013, 1:14 am IST
பகிர்:

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் அந்த நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியானதையடுத்து ஆலையை மூடமாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தீர்ப்பாயத்தின் நீதித் துறை உறுப்பினர் எம். சொக்கலிங்கம், துறைசார் நிபுணத்துவ உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

Advertisement

Advertisement

அப்போது இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.