முகப்பு
தமிழ்நாடு

இந்த ஆண்டு 100 கி.மீ. பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க முடிவு

இந்த நிதியாண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும் என்று

Updated On : 2 ஏப்ரல், 2013 at 3:46 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

இந்த நிதியாண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அவர் தாக்கல் செய்த நகராட்சி நிர்வாகம் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:

2012-13-ம் ஆண்டில் மூன்று மாநகராட்சிகள், 23 நகராட்சிகளில் ரூ. 10 கோடி செலவில் 52.24 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் சாலைகள் அமைக்கும் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன.

Advertisement

2013-14-ம் ஆண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து இயந்திரம் மூலம் துகள்களாக்கும் பணி சுயஉதவிக் குழுக்களால் செயல்படுத்தப்படுகிறது.

இதுவரை 11 மையங்களில் ரூ. 80 லட்சத்தில் இதற்கான இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் நகர்ப்புற உள்ளாட்சிகளில் மேலும் 50 மையங்கள் அமைக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.