முகப்பு
தமிழ்நாடு

எஸ்.எஸ்.எல்.சி. ஆங்கிலம் முதல் தாள் தேர்வு: ஒரே தேர்வு மையத்தில் காப்பியடித்த 37 மாணவ, மாணவியர் பிடிபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் திங்கள்கிழமை

Updated On : 2 ஏப்ரல் 2013, 1:20 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி.  ஆங்கிலம் முதல் தாள் பொதுத்தேர்வின்போது, துண்டுச் சீட்டு வைத்து காப்பியடித்ததாக 37 பேர் பிடிபட்டனர்.

 திங்கள்கிழமை ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்  (நாட்டு நலப்பணித் திட்டம்) உஷாராணி தலைமையிலான பறக்கும் படையினர் ஒருசில தேர்வு மையங்களில் திங்கள்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  செங்கம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வில், முக்கிய வினாக்களுக்கான விடைகளை துண்டுச் சீட்டுகளாக எழுதிக்கொண்டுவந்து, மறைத்து வைத்து காப்பியடித்ததாக 37 மாணவ, மாணவியர் பிடிபட்டனர்.

அம்மாணவ, மாணவியர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

Advertisement

அவர்களில் தனித் தேர்வர்கள் 30 பேர்; மீதமுள்ள 7 பேர் செங்கம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 காப்பியடித்து பிடிபட்ட மாணவ, மாணவியரின் விடைத் தாள்கள், காப்பியடிக்க பயன்படுத்திய துண்டுச் சீட்டுகள், ஜெராக்ஸ் பிரதிகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.