முகப்பு
தமிழ்நாடு

கொட்டாம்பட்டி அருகே கார் மீது லாரி மோதல்: சென்னையைச் சேர்ந்தவர் சாவு

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கார் மீது மணல் லாரி  மோதியதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.

Updated On : 2 ஏப்ரல் 2013, 3:19 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கார் மீது மணல் லாரி  மோதியதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் அபுதாகீர் (39) மற்றும் பாரூக் (30), தயூப், வகிதா (21), இவரது குழந்தை ஆகியோர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு வந்துள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலையில் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மணப்பச்சேரி அருகே, நான்குவழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து மதுரைக்குச் சென்ற மணல் லாரி திடீரென இடது ஓரமாகத் திரும்பியதில் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் கார் நொறுங்கியது.

Advertisement

Advertisement

காரில் இருந்த அபுதாகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கார் ஓட்டுநர் பீர்முகமது (32) உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு  காரணமான மணல் லாரியைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.