முகப்பு
தமிழ்நாடு

டேங்கர் லாரி மோதி 50 ஆடுகள் சாவு

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி விலக்கில்  திங்கள்கிழமை காலையில் டேங்கர் லாரி மோதியதில்

Updated On : 2 ஏப்ரல் 2013, 3:39 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே காடனேரி விலக்கில்  திங்கள்கிழமை காலையில் டேங்கர் லாரி மோதியதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.

டி.கல்லுப்பட்டி அருகே முத்தப்பன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி, சங்கரப்பன்,  வாழைச்சின்னு மற்றும் நாகப்பன் ஆகியோர் மேய்ச்சலுக்கு ஆடுகளை வாங்கி வளர்த்து வந்தனர். திங்கள்கிழமை காலை பால்சாமி என்பவர் ஆடுகளை நத்தம்பட்டி நோக்கி ஓட்டிச் சென்றாராம்.

ராஜபாளையம் சாலையில் காடனேரி விலக்கு அருகே சென்றபோது, பரமத்தி வேலூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பாமாயில் ஏற்றிக் கொண்டு சென்ற லாரி,  ஆடுகள் கூட்டத்துக்குள் எதிர்பாராதவிதமாக புகுந்தது.

Advertisement

Advertisement

இதில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள், சம்பவ இடத்திலேயே பலியாகின. 20-க்கும்  மேற்பட்ட ஆடுகள் காயமடைந்தன. இச்சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டி.கல்லுப்பட்டி போலீஸார் லாரி ஓட்டுநர் பரமத்திவேலூர் அருகே உள்ள உப்புப்பட்டியைச் சேர்ந்த ராஜா (47) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.