யுகாதி திருநாள்: ஆளுநருக்கு தொலைபேசியில் முதல்வர் வாழ்த்து
யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் கே.ரோசய்யாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்தார்.
யுகாதி திருநாளை ஒட்டி, ஆளுநர் ரோசய்யாவுக்கு மலர்க் கொத்துடன் வாழ்த்துக் கடிதத்தையும் முதல்வர் ஜெயலலிதா அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்தில், மகிழ்ச்சியான இந்த யுகாதித் திருநாளில் எனது நல்வாழ்த்துகளை தங்களுக்கும், தங்களின் குடும்பத்தினருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய வருடம் தங்களுக்கு மகிழ்ச்சியையும், வெற்றியைத் தரும் ஆண்டாகவும் அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆளுநர் கே.ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். தனக்கு வாழ்த்துத் தெரிவித்த முதல்வருக்கு ஆளுநர் கே.ரோசய்யா நன்றி தெரிவித்தார்.
Advertisement